தமிழகத்தில் இயக்கப்படும் 13 சிறப்பு ரெயில்களின் நேரம் மாற்றம்!

பயணிகளின் வசதி, ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தை கொண்டு ரெயில்களின் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரெயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி-மைசூர் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06235) தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் ரெயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும்.

ஜூன் 18-ந் தேதி முதல் ஒகா-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரெயில் (09568) தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும்.

எழும்பூர்-தூத்துக்குடி தினசரி சிறப்புரெயில் (02693) தூத்துக்குடி ரெயில் நிலையத்தை காலை 6.40 மணிக்கு வந்தடையும். எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரெயில் (02661) காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும்.

எழும்பூர்-ராமேசுவரம் தினசரி சிறப்பு ரெயில் (02205) அதிகாலை 4.20 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும். கொல்லம்-எழும்பூர் தினசரி சிறப்பு ரெயில் (06724) கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும் வரும்.

திருநெல்வேலி-பாலக்காடு தினசரி சிறப்பு ரெயில் (06791), திருப்பதி- ராமேசுவரம் வாரம் 3 முறை சிறப்பு ரெயில் (06779) உள்பட 13 சிறப்பு ரெயில்களில் இடைப்பட்ட சில ரெயில் நிலையங்கள், புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ரெயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools