தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் காலமானதால் இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் ஆகஸ்ட் 26 மற்றும் 27-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதால் மக்கள் நலன் கருதி தற்போது தமிமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த இயலாது. செப்டம்பர் 2-வது வாரம் வரை தேர்தல் நடத்த இயலாது. அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.