X

தமிழகத்தில் அதிமுக கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

* தி.மு.க. ஒரு கார்பரேட் கம்பெனி.

* நான் தலைவன் அல்ல, தொண்டன். அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா?

* * தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.

* எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல.

* மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.

* 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர்.

* நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன்.

* தமிழகத்தில் 35 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.