காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது. இருப்பினும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன. ஆனாலும் மீண்டும் விவசாயிகள் நெற்பயிரிட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து விமானடிக்கு 2600 கன அடி நீர் திறக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.