தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

தமிழகத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்பட வேண்டும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools