X

தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் – முதல் நாள் மும்பை 6/284

ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் ஐந்தாவது சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு – மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் ஜெய் கோகுல் பிஸ்டா, பூபென் லால்வாணி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிஸ்டா 41 ரன்னிலும், லால்வாணி 21 ரன்னிலும், ஹர்திக் டமோரே 21 ரன்னிலும் அவுட்டாகினர்.

மும்பை அணியின் ஷாம்ஸ் முலானி, ஆதித்யா டாரே ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். முலானி 87 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் மும்பை அணி 89.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. ஆதித்யா டாரே 69 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

தமிழ்நாடு சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர் ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Tags: sports news