X

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் (நேற்று மற்றும் இன்று) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

இதற்கிடையே இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவித்துள்ளார். சென்னையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை 10 மணி வர இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags: tamil news