சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* உதவையில் 4 செ.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 3 செ.மீ., பேரையூர், கலட்டி, நிலக்கோட்டையில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.
* தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
* தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.