தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 16-ந்தேதி வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.