தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்யும்.
வருகிற 7-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.