தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்தது

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அனுமதி அளித்திருந்தது. மேலும் 44 இடங்களில் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்திற்குள் அணி வகுப்பு நடத்த வேண்டும் உள்பட 11 நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உயர்நீதிமன்றம் பின்னர் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் 44 இடங்களில் நேற்று நடைபெற இருந்த அணிவகுப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்கவும், 3 மாவட்டங்களில் மட்டும் அணிவகுப்பை நடத்தவும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு முடிவு செய்தது.

அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நேற்று மாலை தொடங்கி நடைபெற்றது. முன்னதாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கைகளில் காவிக் கொடி ஏந்திய ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் அணி வகுத்துச் சென்றனர்.

இந்த அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools