X

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்கிறது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து அதிகாரி கூறியதாவது:

வெப்ப சலனம் மற்றும் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்ப சலனத்தின் காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம், சிவகங்கையில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. மேல்ஆலத்தூர், ஆம்பூரில் தலா 12 செ.மீ., குடியாத்தம், 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news