Tamilசெய்திகள்

தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று, நாளையும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கடலோர மாவட்டம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.