X

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை – 12 மாவடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலா திடீர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலையில் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.