தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு புதிய உச்சம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சமாக உயர்வடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் 2022-ம் ஆண்டில் ஒரே நாளில் 17,106 மெகாவாட் மின்தேவையை மின்வாரியம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது நிலையில் சோதனை ஓட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் உற்பத்தி தொடங்குகிறது.

பொதுமக்களின் மின்சார புகார்களை தெரிவிக்க அமைக்கப்பட்ட மின்னகத்திற்கு 7.11 லட்சம் புகார்கள் வந்தது. அதில் 99 சதவீதம் அதாவது 7.06 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools