X

தபால் வாக்குகளை எடுத்துச் எல்லும் பணி தொடங்கியது

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது. இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைதேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாக், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பதிவான 9,993 தபால் வாக்குகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.