தன்ஷிகா நடிக்கும் ‘யோகி டா’!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா.  ஒரு ஆணுக்கு இணையான கம்பீர தோற்றத்துடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு புரொபஷனல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது உடல் மொழியாலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இதே போல் தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்துள்ளது.

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் “யோகி டா” என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் திரைக்கதை, கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கவுதம் கிருஷ்ணாவுடன், ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசி்குமாரும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதிரியான இஷ்ராத் காதறியும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ், கவுதம் கிருஷ்ணா, ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர் ஆகியோரும் பணிபுரி்கின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று, டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools