X

தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி

 

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்திருந்தார். கணவரான நடிகர் தனுஷை விட்டு பிரிந்து வாழப்போவதாக
அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐஸ்வர்யா, இந்த அறிவிப்புக்கு பின்னர் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை
நீக்காமல் இருந்து வந்தார்.

இதனால் ஆறுதல் அடைந்த ரசிகர்கள், விரைவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைவார்கள் என்று நினைத்து வந்தனர். மேலும் இரண்டு மகன்களுக்காக இருவரும் மீண்டும் சேர வேண்டும்
என்கிற குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன. இதைப்பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஐஸ்வர்யா செய்த செயல் தனுஷ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து
நீக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா, தற்போது அதனை நீக்கிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி இருக்கிறார்.

இதன்மூலம் தனுஷுடன் மீண்டும் ஐஸ்வர்யா சேர்வது கடினம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே சமயம் டுவிட்டரில் மட்டும் தனுஷின் பெயரை நீக்கி உள்ள ஐஸ்வர்யா
இன்ஸ்டாகிராமில் அவரது பெயரை நீக்காமல் இருக்கிறார்.