X

தனுஷ் பிரிவு குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய திருமண பிரிவை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பது, “வாழ்க்கையை நாம் சமாளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம் வழியில் வரும் அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டும். இறுதியில், நமக்கென்று என்ன இருக்கிறதோ அது நம்மிடம் வரும்” என்று பகிர்ந்துள்ளார்.