கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.
தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
யூடியூபில் 34 மில்லியனுக்கும் அதிக பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என் ரகிட ரகிட நடனம்’ எனக் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் காருக்குள் அமர்ந்தபடி பாடலை ஒலிக்கவிட்டு அதை வீடியோ பதிவாக செய்திருக்கிறார் செல்வராகவன்.