`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், வில்லனாக `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய `வட சென்னை’ படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
எழுத்தாளர் பூமணியின் `வெக்கை’ புத்தகத்தை தழுவி, இடம் கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)