தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு. குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி இருக்கிறார்கள். குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கஸ்தூரி பதிவு செய்து இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools