Tamilசினிமா

தனுஷை வைத்து படம் இயக்கும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரில் ஒருவர் ஓம் பிரகாஷ். தெலுங்கு , இந்தி , மலையாள சினிமாவிலும் ஓம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார். 5௦௦-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 15 வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

களவாணி, நாணயம், அனேகன், மாரி, நீதானே என் பொன்வசந்தம், திருச்சிற்றம்பலம் போன்ற பல பிரபலமான படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலின் மிகவும் ஹிட்டானது. பாடல் ஹிட்டாவதற்கு ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் படத்தில் பெரும்பாலும் காட்சிகள் காட்டுக்குள் இரவு நடப்பது போன்று அமைந்து இருக்கும்.அக்காட்சிகளை ஓம் பிரகாஷ் மிகவும் திறமையுடன் கையாண்டு இருப்பார்.

இந்நிலையில் ஓம் பிராகாஷ் ஒளிப்பதிவாளர் அவதாரத்தில் இருந்து இயக்குனர் அவதாரத்திற்கு மாறியுள்ளார். தனுஷை கதாநாயகனாக வைத்து படத்தை இயக்கவிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பில்ம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் கதையை தனுஷ் எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பற்றிய அதிகாரப் பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.