X

தனுஷின் 50 வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்

The Gray Man (2022) Dhanush as Avik San. Cr. Paul Abell/Netflix © 2022

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் அப்டேட்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார் தனுஷ்.