துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடன இயக்குனர் ஜானி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.