தனுஷின் புதிய படத்தின் தலைப்பு ‘உலகம் சுற்றும் வாலிபன்’?

‘அசுரன்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் தலைப்பு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்ட போது, “இப்போது தான் படப்பிடிப்பே தொடங்கியுள்ளோம். இன்னும் தலைப்பை இறுதி செய்யவில்லை” என்று தெரிவித்தனர். இந்த படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். ஒரே கட்டமாக லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools