தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்தடுத்து படக்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற ஜனவரி 16-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் 40-வது படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனுஷின் 41-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.