X

தனுஷின் ‘பட்டாஸ்’ பட டிரைலர் வெளியானது!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். பொங்கல் விடுமுறையையொட்டி இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது. டிரைலர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே பல்லாயிறம் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.