X

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ‘நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து, இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும், ‘நானே வருவேன்’ திரைப்படத்தை 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.