தனுஷின் ‘குபேரா’ படத்தின் டீசர் மே 2 ஆம் தேதி வெளியாகிறது
நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் சுவாரசியமான அப்டேட் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் பண கட்டுகள் அடுக்கி வைத்துள்ள புகைப்படத்தில் குபேரா என்ற படத்தின் தலைப்பை வைத்து இருக்கின்றனர். படத்தின் டீசர் அல்லது கில்ம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது படம் எம்மாதிரி கதைக்களத்துடன் இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.