X

தனுஷின் ‘அசுரன்’ பட போஸ்டர் வைரலானது

வடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, கருணாஸ் மகன் கென் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இதன் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனுஷின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாக இருக்கிறது.