Tamilசெய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்பிடி போட்ட டெல்லி முதலமைச்சர்!

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேர்மையான எங்களது ஆட்சி டெல்லியில் இருக்கும் வரை, தனியார் பள்ளிகள் அரசு அனுமதியில்லாமல் பள்ளி கட்டணத்தை உயர்த்த முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘டெல்லியில் நேர்மையான அரசு இருக்கும்வரை பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. டெல்லியில் உள்ள எந்தவொரு தனியார் பள்ளியும் தன்னிச்சையாக கல்வி கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது. கடந்த ஐந்து ஆண்டுகளை போன்று கட்டணத்தை கட்டுக்குள் வைப்போம்’’ என்றார்.

கடந்த ஏப்ரல் 2018-ல் கல்வி இயக்குனரகம் அனுமதியின்றி தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்வி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வருடம் மே மாதம் 575 தனியார் பள்ளிகள் அதிகமாக வசூலித்த தொகையை திருப்பி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *