தனிப்பட்ட முறையில் பா.ஜ.க தலைவர்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை – தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

தனிப்பட்ட முறையில் பா.ஜனதா தலைவர்கள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. அவர்களுடைய மதசார்பின்மைக்கு எதிரான கொள்கை, கூட்டாட்சி தத்துவத்தை குலைப்பது, இந்துத்துவா இவைதான் எனக்கு பிடிக்காதது. அவர்கள் திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள்.

இந்தியாவில் காங்கிரசின் ஓட்டு வங்கியே தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் தான். இப்போது அவர்களை குறிவைத்து வேலை பார்க்கிறார்கள். ரோடு போட்டு தருகிறோம். கழிவறைகள் கட்டி தருகிறோம். கோவில் கட்டி தருகிறோம், பதவி தருகிறோம் என்று ஆசைகாட்டி அவர்களை இழுக்கிறார்கள்.

மதமாற்றத்தை தடுக்கணும், காங்கிரசுக்கு போகும் வாக்குகளை தடுக்கணும் என்பது தான் அவர்கள் திட்டம். இதர பிற்பட்ட சமூகத்தினரை ஏற்கனவே வளைத்து விட்டார்கள். மாநிலங்களில் அவர்கள் சாதிவாரியான கட்சிகளுக்கும் மாறிவிட்டார்கள். அதனால் தான் காங்கிரசுக்கு வாக்கு குறைந்துவிட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools