X

தண்ணீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம் – டெல்லி அரசு அறிவிப்பு

காலநிலை மாற்றத்தால் பருவநிலை குழம்பிபோயுள்ள நிலையில் அதன் தாக்கம் உலக நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. துபாய் கனமழை, ஆப்கனிஸ்தான வெள்ளம், இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ள தண்ணீர் பஞ்சம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

சமீப காலமாக தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் கர்நாடக தலைநகர் பெங்களூரு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

நேற்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து கார் கழுவுவது, கட்டுமான பணியிடங்கள் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வேலைகளுக்கு குடிநீரைப் பபயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது.

மக்கள் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோரிக்கை விடுத்தும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட வில்லை என்றும் அரியானா பாஜக அரசு டெல்லி அரசுக்கு எதிராக சதி செய்கிறதுஎன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று முன் தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இடத்ற்கிடையில் டெல்லியில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைத்துள்ளனர்.