Tamilசெய்திகள்

தடுப்பூசிக்கு பயந்து மதுபானம் குடிக்கும் கர்நாடக பெண்கள்!

உலகையே புரட்டி போட்டுள்ள  கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. தற்போது, ஆர்வத்துடன் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், பலரிடம் கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சமும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து, அதை போட்டுக் கொள்ளாமல் இருப்பதற்காக யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஒனகெரே கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் பலரும் மதுகுடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அதாவது மதுபானம் குடித்தால்  கொரோனா தடுப்பூசி  போடமாட்டார்கள் என்பதால் அவர்கள் தினமும் காலையிலேயே மதுபானம் குடிக்க தொடங்கி விடுகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறை ஊழியர்கள் தினசரி அந்த கிராமத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இது அவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட சுகாதாரத்துறையினரிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.