வெளிநாட்டு தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என்று தெரிகிறது. அதாவது, தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும் சட்டரீதியான பாதுகாப்பைக் கோரியதாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
இழப்பீடு கோருவதில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால், இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல, அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும் அதே பாதுகாப்பைப் பெற வேண்டும் என்றும் சீரம் நிறுவனம் கூறியதை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசிக்கும் மத்திய அரசு இதுவரை சட்டரீதியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.