தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு! – போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலையின் மீது யாரோ மர்ம நபர்கள் சாணத்தை பூசி இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழ் பல்கலை. போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். திருவள்ளுவர் சிலையை அவமதித்த நபர்களை தேடி வருகின்றனர்.

திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீறு அணிவிக்கப்பட்டு பாஜக டுவிட்டர் பக்கத்தில் படம் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: south news