தங்கம் விலை சரிவு – சவரனுக்கு ரூ.280 குறைந்தது
சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4,840-க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4,805 ஆக விற்பனை ஆகிறது. பவுன் ரூ.38,720-ல் இருந்து ரூ.38.440-ஆக குறைந்துள்ளது.
ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ. 35-ம் பவுன் ரூ.280-ம் குறைந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்து இருக்கிறது. கிராம் ரூ.66-ல் இருந்து ரூ.64.80 ஆகவும், கிலோ ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.64,800 ஆகவும் குறைந்து உள்ளது.