X

தங்கம் விலை குறைந்தது – சவரன் ரூ.53,040 விற்பனை

தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,630-க்கும் சவரன் ரூ. 53,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.96.20-க்கும் பார் வெள்ளி ரூ. 96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.