Tamilசெய்திகள்

தங்கம் விலை உயர்வு – சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,480 விற்பனையானது.

இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,205-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.