தங்கம் விலை உயர்வு – சவரன் ரூ.54,800 ஆக விற்பனை
அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,850-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.