X

தங்கம் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும், 2-ந்தேதி ரூ.51,640-க்கும், நேற்று ரூ. 51,440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.