தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்தபடி இருந்து, கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.30 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர், 2021-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்தையும் கடந்தது.
இப்படியாக தொடர்ந்து அதிகரித்து கடந்த ஆண்டில் (2022) ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. இந்த ஆண்டில் ரூ.45 ஆயிரத்தையும் தங்கம் விலை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இடையில் ஓரளவுக்கு விலை குறைந்தாலும், பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்து ரூ.47 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.47 ஆயிரத்து 320-க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,915 ஆக உள்ளது.
அதிலும் கடந்த மாதம் (அக்டோபர்) இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயரத்தொடங்கி இருக்கிறது.