Tamilசெய்திகள்

தங்கம் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.5,270-க்கும் சவரன் ரூ.42,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.

நேற்று ரூ.67.30-க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.68.70-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700-க்கு விற்கப்படுகிறது.