பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.
நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.28 ஆயிரத்து704 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் 3588 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை ஒரு சவரனுக்கு 344 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.28,360 என்ற அளவில் விற்பனை ஆனது. கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.3545-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1800 ரூபாய் வரை குறைந்துள்ளது. குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 616 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3702 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு மேலும் 800 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.47 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் 47 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.