தங்கம் கடத்த முயன்ற 4 இந்தியர்கள் இலங்கை விமான நிலையத்தில் கைது
இலங்கையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் 4 இந்தியர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்கம் கடத்தியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 6 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
இதேபோன்று அதே விமான நிலையத்தில் ஒரு கிலோ 370 கிராம் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து இந்தியா திரும்பியபோது தங்கத்தை கடத்த முயன்றதாக போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.