‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு இடம்பெறும் வீடியோ வெளியானது
நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’. இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும். இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்கிறார்.
தக்லைப்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடந்தது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா பங்கேற்றனர்.இப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதால் அவருக்கு பதிலாக சிம்பு இணைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ‘தக் லைப்’ படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது இணைய தளத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது. அதில் நடிகர் சிம்பு ஒரு சண்டை காட்சியில் வேகமாக ஒரு கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் எதிரிகள் மீது சுடுவது போன்று அமைந்துள்ளது. இது தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், டெல்லியில் தற்போது தொடங்கிய படப்பிடிப்பில், நடிகர் கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.