Tamilசெய்திகள்

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் எலான் மஸ்க்

சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க். தொடர்ந்து
அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின், டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு
பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு இருதரப்பும்
சம்மதம் தெரிவித்துள்ளது.

தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.