பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நன்மைகளை பலதரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வரை பெரும்பாலான அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் இணைந்து வருவதுடன், நாட்டு நடப்பு குறித்த தங்கள் கருத்துக்களை அவற்றில் பகிர்ந்தும் வருகின்றனர்.
இப்படி சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் வரிசையில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியும் தற்போது இணைந்துள்ளார். டுவிட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கி உள்ள அவர், அதை தீவிரமாக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த தகவலை கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
பொதுமக்களுடனும், ஊடகத்தினருடனும் பேசுவதற்காக மாயாவதி, டுவிட்டரில் இணைந்திருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.