X

டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் காய்ச்சலுக்கு நிவாரணி மாத்திரைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக பெங்களூருவில் உள்ள டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோடு மாதவ நகரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்நிறுவனத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, சிக்கிம், கோவா உள்பட நாடுமுழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அதன் அதிகாரிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.